தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குறைவான அரசு பஸ்கள் ஆபத்தில் மாணவர்கள்

குறைவான அரசு பஸ்கள் ஆபத்தில் மாணவர்கள்

குறைவான அரசு பஸ்கள் ஆபத்தில் மாணவர்கள்


UPDATED : ஜூன் 10, 2016 12:00 AM

ADDED : ஜூன் 10, 2016 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2016 12:00 AM ADDED : ஜூன் 10, 2016 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்
:விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட கிராமப்புறப் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்து பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் அவலநிலை தொடர்கிறது.

ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ்களின் எண்ணிக்கை மட்டும் அதிகப்படுத்துவதில்லை. பஸ்களில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிக்க மாணவர்கள் பயணம் செய்ய முடியாது தவிக்கின்றனர்.

பள்ளி, கல்லுாரி மாணவர்களில் 70 சதவீதம் பேர் அரசு பஸ்களில் தான் பயணம் செய்கின்றனர். ஆனால் அவர்களது பயணத்திற்கேற்ப காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதன் காரணமாக படிக்கட்டு பயணமும் தொடர்கிறது.

படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துகளை மட்டும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அதன் பின் அதற்கான காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை.

இலவச பஸ் பாஸ் மூலம் அரசு பஸ்களில் பயணம் செய்ய காத்திருக்கும் மாணவர்களை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி ஏற்றாமல், சிறிது துாரம் ஓடவிட்டு பஸ்சில் ஏற்றுகின்றனர். ஓடிச்சென்று பஸ்சில் ஏறும் மாணவர்கள் கால் இடறி, கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இலவச பஸ் பாஸ் மூலம் பயணிக்கும் மாணவர்களை அரசு பஸ் கண்டக்டர்கள் பலர் மதிப்பதில்லை. ஓசியில் ஏற்றி செல்கிறோம் என்ற நினைப்பில் மாணவர்களை மரியாதை குறைவாக நடத்துகின்றனர்.

பஸ்சிற்குள் ஏறும் மாணவர்கள் புத்தகபைக்குள் இருந்து இலவச பஸ் பாஸை எடுக்கும் முன்னரே, அவர்களை திட்டுகின்றனர். படிக்கட்டு பயணங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, காலை மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும் மாணவர்களுக்கு பள்ளி, கல்லுாரி மட்டுமன்றி, பெற்றோர்களும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us