தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை சிண்டிகேட் நாளை மறுநாள் கூடுகிறது

சென்னை பல்கலை சிண்டிகேட் நாளை மறுநாள் கூடுகிறது

சென்னை பல்கலை சிண்டிகேட் நாளை மறுநாள் கூடுகிறது


UPDATED : ஜூன் 11, 2016 12:00 AM

ADDED : ஜூன் 11, 2016 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2016 12:00 AM ADDED : ஜூன் 11, 2016 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலையில், மாதந்தோறும், பல்கலை யின் நிர்வாகம் தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள, சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படும். 

ஆனால், மார்ச் மாதத்துக்கு பின், சிண்டிகேட் கூட்டம் நடக்கவில்லை. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படாமல், தற்போது ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. சென்னை பல்கலைக்கு துணைவேந்தர் இல்லாத நிலையில், உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில், ஒருங்கிணைப்பு குழு செயல்படுகிறது. இந்த குழுவில் பல்கலை சார்பில், பேராசிரியர் ஜோதி சிவஞானம் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால், மார்ச் மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், ஜோதி சிவஞானத்தை மாற்றி விட்டு, ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன் புதிய உறுப்பினராக, உயர்கல்வி செயலரால் அறிவிக்கப்பட்டார். இதற்கு, சிண்டிகேட் உறுப்பினர்கள் அனுமதிக்காததால், கூட்டம் பாதியில் முடிந்தது.

இதற்கிடையில், தன்னை நீக்கியது செல்லாது எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பேராசிரியர் ஜோதி சிவஞானம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் நிலையில், அன்று பிற்பகல், 2:30 மணிக்கு சிண்டிகேட் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டு உள்ளது.

ஜோதி சிவஞானம் நீக்கப்பட்டதற்கு, சிண்டிகேட் உறுப்பினர்களிடம் முன் தேதியிட்டு அனுமதி கடிதம் வாங்க, உயர்கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இந்த கூட்டமும் பரபரப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us