தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட படிப்புக்கு இன்று விண்ணப்பம்

சட்ட படிப்புக்கு இன்று விண்ணப்பம்

சட்ட படிப்புக்கு இன்று விண்ணப்பம்


UPDATED : ஜூன் 13, 2016 12:00 AM

ADDED : ஜூன் 13, 2016 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2016 12:00 AM ADDED : ஜூன் 13, 2016 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அரசு சட்டக் கல்லுாரிகளில்
, சட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகின்றன.

அம்பேத்கர் சட்டப் பல்கலையின் இணைப்பில்,சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,செங்கல்பட்டு மற்றும் வேலுாரில், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் செயல் படுகின்றன. இவற்றில், ஒருங்கிணைந்த, பி.ஏ., - எல்.எல்.பி., மற்றும் மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.

இந்த கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகின்றன. பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி., மூன்றாண்டு படிப்புக்கு, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஏழு சட்டக் கல்லுாரிகளிலும், அம்பேத்கர் சட்ட பல்கலையிலும், நேரடியாக விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஐந்து ஆண்டு படிப்புக்கு, ஜூன் 30; மூன்றாண்டு படிப்புக்கு, ஜூலை 15க்குள் வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us