தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச பயிற்சி; நாளை விண்ணப்பிக்க கடைசி

இலவச பயிற்சி; நாளை விண்ணப்பிக்க கடைசி

இலவச பயிற்சி; நாளை விண்ணப்பிக்க கடைசி


UPDATED : ஜூன் 14, 2016 12:00 AM

ADDED : ஜூன் 14, 2016 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2016 12:00 AM ADDED : ஜூன் 14, 2016 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் நடக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான குறுகியகால இலவச பயிற்சியில் சேர நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில், தையல் இயந்திர ஆப்பரேட்டர், மெல்ட்டிங் உதவியாளர் ஆகிய பயிற்சி, காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்; வயது வரம்பு, 18 - 40.

அரசு விதிப்படி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். விண்ணப்பதாரர்கள், அசல் கல்வி சான்றிதழ், ஜாதி மற்றும் இருப்பிட முகவரி சான்றிதழ் ஆகியவற்றுடன் சமீபத்தில் எடுத்த, இரு புகைப்படத்தையும் கொண்டுசெல்ல வேண்டும். 

பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் விண்ணப்பங்களை பெற்று, சான்றிதழ்களின் இரு நகல்களை இணைத்து நாளைக்குள்(15ம் தேதி) சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us