தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தண்டனையால் மாணவர் மயக்கம்

ஆசிரியர் தண்டனையால் மாணவர் மயக்கம்

ஆசிரியர் தண்டனையால் மாணவர் மயக்கம்


UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM

ADDED : ஜூன் 15, 2016 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM ADDED : ஜூன் 15, 2016 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி
: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயின்ட் பால்ஸ் பள்ளியில், ஆசிரியர் கொடுத்த தண்டனையால் மாணவர் மயக்கமடைந்தார்.

துாத்துக்குடி வீரவாஞ்சிநகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விஜய்,13, செயின்ட் பால்ஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்றார். ஆங்கில ஆசிரியர் ஸ்டீபன் விஜயையும் மற்றொரு மாணவரையும் தலையால் ஒருவரை ஒருவர் முட்டும்படி தண்டனை கொடுத்தார்.

இதில் விஜய் மயக்கமடைந்தார். பள்ளி நிர்வாகம் முதலுதவி சிகிச்சை செய்து விஜயை வீட்டிற்கு அனுப்பியுள்ளது. விஜய் பள்ளியில் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்தார். மீண்டும் மயக்கமடைந்தார். அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிரியர் ஸ்டீபன் மீது ராமச்சந்திரன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us