UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM
ADDED : ஜூன் 15, 2016 11:11 AM
சென்னை
:
தமிழ் வளர்ச்சி துறையால் நடத்தப்படும், சிறந்த
தமிழ் நுால்களுக்கான பரிசுப் போட்டிக்கு, நுால்கள்
வரவேற்கப்படுகின்றன.
கடந்த, 2015 ஜன., 1ம் தேதி முதல், டிச., 31ம் தேதி வரை வெளியிடப்பட்ட நுால்கள், 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசுப் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. போட்டியில், ஒவ்வொரு வகைப்பாட்டிலும், ஒரு நுால் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, நுாலாசிரியருக்கு, 30 ஆயிரம் ரூபாய், அந்நுாலை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
பரிசு போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை - 8 என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பம் பெறலாம்.
விண்ணப்பத்துடன், 10 நுால், போட்டிக்கட்டணம், 100 ரூபாயை வங்கி கேட்பு காசோலையாக, தமிழ் வளர்ச்சி இயக்குனர், சென்னை என்ற பெயரிலோ, அலுவலகத்தில் நேரில் செலுத்தி, அதற்கான ரசீதுடன் அளிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆக., 10ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
