25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கால அவகாசம்!
25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கால அவகாசம்!
UPDATED : ஜூன் 16, 2016 12:00 AM
ADDED : ஜூன் 16, 2016 10:57 AM
கோவை
: தனியார்
பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ்
நிரப்பப்படாத இடங்களில் மாணவர்களை சேர்க்க, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்,
பின்தங்கிய, நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கும் தரமான கல்வி
கிடைக்கும் வகையில், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில்,
25 சதவீத இடஒதுக்கீடு தனியார் பள்ளிகளில்
வழங்கப்பட்டு வருகிறது.
இதன் படி, மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்துள்ள நிலையில், 100 சதவீத இலக்கை எட்டும் வகையில், நிரப்பப்படாத இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு, இம்மாதம், 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, அனைத்து பள்ளி முதல்வர்களும் கட்டாயம் விண்ணப்பங்களை வினியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை
மாவட்டத்தில் நிரப்பப்படாத இடங்கள் குறித்தும், விண்ணப் வினியோகம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு
வருகின்றனர். நிரப்பப்படாத இடங்கள் குறித்து தகவல் பலகையில் பள்ளிகள்
ஒட்டப்படவில்லை என்றாலும், விண்ணப்பங்களை வழங்காமல் இருந்தாலும்
பெற்றோர் புகார் தெரிவிக்கலாம் என, சிறப்புக்குழு அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
