தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/’தினமலர் - உங்களால் முடியும்’ ஜூன் 19ல் நடக்கிறது

’தினமலர் - உங்களால் முடியும்’ ஜூன் 19ல் நடக்கிறது

’தினமலர் - உங்களால் முடியும்’ ஜூன் 19ல் நடக்கிறது


UPDATED : ஜூன் 17, 2016 12:00 AM

ADDED : ஜூன் 17, 2016 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2016 12:00 AM ADDED : ஜூன் 17, 2016 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 முடித்து, இன்ஜி., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்று, கல்லுாரி மற்றும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்யலாம். இந்த கவுன்சிலிங் விதிகள் குறித்த, மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களுக்கு விடை காண, தினமலர் நாளிதழ் சார்பில், &'உங்களால் முடியும்&' நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

தமிழகத்தின், முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி, வரும், 19ம் தேதி சென்னை அண்ணா நகரிலும், திருவள்ளூரிலும் நடக்கிறது.

தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.

கவுன்சிலிங்கில், பாடப் பிரிவுகள் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விளக்கம் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, கட்டணம் எதுவும் இல்லை. மாணவர்களுக்கு, கவுன்சிலிங் தொடர்பான வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் நேரில் விளக்கம் பெறலாம்.

சிறந்த கேள்வி கேட்கும், இரண்டு பேருக்கு, தலா ஒரு வாட்ச்; ஐந்து பேருக்கு தலா, ஒரு, பென் - டிரைவ் பரிசாக வழங்கப்படும். நிகழ்ச்சிக்கு வருவோரில், 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்ஜி., படிப்புக்கான உதவித்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us