sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங் கட்ஆப் அறிவிப்பு

/

ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங் கட்ஆப் அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங் கட்ஆப் அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங் கட்ஆப் அறிவிப்பு


UPDATED : ஜூன் 30, 2009 12:00 AM

ADDED : ஜூன் 30, 2009 03:11 PM

Google News

UPDATED : ஜூன் 30, 2009 12:00 AM ADDED : ஜூன் 30, 2009 03:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


சென்னை:
இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலை 2ம் தேதி திருச்சியில் துவங்குகிறது. இதற்கான கட்ஆப் மதிப்பெண் ஜூன் 29ம் தேதி அறிவிக்கப்பட்டது.
தமிழ் வழி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான கட்ஆப் 540 மதிப்பெண்களாகவும், மாணவிகளுக்கு 785 மதிப்பெண்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 21 ஆயிரத்து 595 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இத்தனை ஆண்டுகளாக சென்னையில் நடந்துவந்த கவுன்சிலிங், முதல் முறையாக இந்த ஆண்டு திருச்சியில் நடக்கிறது.
ஜூன் 2ம் தேதி முதல் திருச்சியில் உள்ள நான்கு மையங்களில் பிரிவு வாரியாக கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் கூறியிருப்பதாவது:
சிறப்புப் பிரிவு மற்றும் தெலுங்கு, மலையாளம், உருது மொழிப் பிரிவுகளுக்கான கவுன்சிலிங், திருச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள ஆர்.சி.ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடக்கும். அறிவியல் பிரிவுக்கான கவுன்சிலிங் (இரு பாலருக்கும்), கே.கே.நகர் நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், கலைப்பிரிவுக்கான கவுன்சிலிங் (இரு பாலரும்), பிராட்டியூர் மேற்கில் உள்ள ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் நடக்கும்.
தொழிற்கல்வி பிரிவுக்கான கவுன்சிலிங், புத்தூரில் உள்ள பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடக்கும். தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெயர்கள், கவுன்சிலிங் நடக்கும் இடம், தேதி, நேரம் போன்றவை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் (www.pallikalvi.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பிரிவு வாரியாக கட்ஆப் மதிப்பெண்கள் விவரம்:
தெலுங்கு, மலையாளம், உருது பிரிவுகளுக்கான கட்ஆப் மதிப்பெண்களும் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவில் உடல் ஊனமுற்றோருக்கு 540 மதிப்பெண்களும் (தமிழ் வழி), தெலுங்கு வழிக்கு 540 மதிப்பெண்கள், உருதுக்கு 540, ஆங்கில வழிக்கு 806 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான கட்ஆப் 943 மதிப்பெண்கள் (தமிழ் வழி), முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 842 (தமிழ் வழி) மதிப்பெண்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us