UPDATED : ஜூலை 01, 2009 12:00 AM
ADDED : ஜூலை 01, 2009 05:47 PM
பொள்ளாச்சி: திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி சார்பில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான, ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு ஜூன் 30ம் தேதி துவங்கியது.
இரண்டாமாண்டு மாணவர்களுக்கான ஆசிரியர் பட்டயப்பயிற்சி தேர்வின் முதல்நாளான 30ம் தேதி, தமிழ் பாடத்திற்கான தேர்வு நடந்தது. பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த தேர்வில், 200 மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். ஜூலை 4ம் தேதி வரை ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூகவியல் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது.
பொள்ளாச்சி தவிர திருமூர்த்திநகர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, கே.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி- திருப்பூர், ஆசிரியர் மகளிர் பயிற்சி நிறுவனம்- கோவை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி- சித்தாபுதூர், அரசு மேல்நிலைப்பள்ளி- சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஏழு மையங்களில் தேர்வு நடக்கிறது.