UPDATED : ஜூலை 22, 2009 12:00 AM
ADDED : ஜூலை 22, 2009 12:43 PM
அ நிறம் | அளவு
கோல்கட்டா: சந்திரனில் மனிதன் காலடி வைத்து 40 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் விழா நடத்த உள்ளது.
இதுகுறித்து கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி டக்ளஸ் கெல்லி கூறியதாவது:
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அப்பல்லோ ராக்கெட் மூலம் ஈகிள் விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்டிரின் ஆகிய விண்வெளி வீரர்கள், நிலவில் தரையிறங்கி சரித்திரம் படைத்தனர். இந்த சாதனை நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில், கோல்கட்டாவில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்பனா சாவ்லா விண்வெளி அறிவியல் மையமும், அமெரிக்க துணை தூதரகமும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இவ்வாறு டக்ளஸ் கெல்லி கூறினார்.
