பெண்கள் பணிபுரிந்து கொண்டே எம்.பி.ஏ., படிக்க வாய்ப்பு
பெண்கள் பணிபுரிந்து கொண்டே எம்.பி.ஏ., படிக்க வாய்ப்பு
UPDATED : ஜூலை 25, 2009 12:00 AM
ADDED : ஜூலை 25, 2009 04:39 PM
குரு கோபிந்த்சிங் இந்த்ர பிரஸ்தா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் இந்திரா காந்தி தொழில்நுட்ப நிறுவனம், பணிபுரியும் பெண்கள் மட்டும் படிக்கும் வகையில் எம்.பி.ஏ., என்டர்பிரைஸ் மேனேஜ்மென்ட் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைந்தது ஒரு ஆண்டு வேலைக்குச் சென்ற அனுபவம் உள்ள பெண்கள் இப்படிப்பை படிக்கலாம். வாரத்தின் இறுதியில் வகுப்புகள் நடைபெறும். இதற்கான மொத்த காலியிடங்கள் 40. இப்படிப்பை தேர்வு செய்ய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான கட்டணம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.
இப்படிப்பிற்கான காலம் இரண்டு ஆண்டுகள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் பணிபுரிந்து கொண்டே படிப்பதால் பெரிய பதவிகளுக்கு செல்லலாம்.
இப்படிப்பை முடித்த பிறகு பெண் வல்லுனர்கள் அனைத்து வித மேலாண்மை திறன்களையும், தொழில் சார்ந்த திறன்களையும் பெறுகின்றனர். இப்படிப்பில் மாடுல்ஸ் ஆன் சிஸ்டம் நாலட்ஜ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, என்டர்பிரைஸ் ரிசோர்ஸ் பிளானிங், சப்ளை செயின் மேனேஜ் மென்ட், இன்னோவேஷன், நாலெட்ஜ் மேனேஜ்மென்ட், ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் போன்ற பாடங்கள் உள்ளன.
தொழில்நிறுவனங்களுக்கு தேவையான வகையில் இப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பை முடித்தவுடன் தொடக்க நிலையிலேயே வருடத்திற்கு ஆறு லட்சம் ரூபாய் சம்பளமாக பெறலாம். மிகச் சிறந்த நிறுவனங்களில் பணியில் சேர வாய்ப்புகள் உள்ளன. இந்திரா காந்தி தொழில்நுட்ப கல்வி நிறுவனம், உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான ஜி.இ., சீமன்ஸ், மாருதி, பாரதி பவுண்டேசன், அடோப், கம்மின்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, டி.சி.எஸ்., போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற அதிக வாய்ப்புள்ளது.
