ஜூலை 30ல் இன்ஜி., கல்லூரி 2ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங்
ஜூலை 30ல் இன்ஜி., கல்லூரி 2ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங்
UPDATED : ஜூலை 28, 2009 12:00 AM
ADDED : ஜூலை 28, 2009 03:39 PM
தமிழகத்தில் 349 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் (பி.எஸ்சி., டிப்ளமோ தகுதி) நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கப்படுவர். நடப்பு ஆண்டில் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஜூலை 10 முதல் 26ம் தேதி வரை கவுன்சிலிங் நடந்தது. சிவில் பிரிவில் பங்கேற்ற 399 பேரில் 372, மெக்கானிக்கல் பிரிவில் 1,219 பேரில் 1,008, எலக்ட்ரிக்கல் பிரிவில் 9,700 பேரில் 9,558 பேருக்கு இடம் கிடைத்தது. முதல்கட்ட கவுன்சிலிங்கில் 11 ஆயிரத்து 426 இடங்கள் நிரப்பப்பட்டன.
காலி இடங்கள்:
சிவில் பிரிவில் - 11, மெக்கானிக்கல் - 52, டெக்ஸ்டைல்ஸ் - 7, எலக்ட்ரிக்கல் - 1,048 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 30ம் தேதி காரைக்குடியில் நடக்கிறது. அழைப்பு விடுக்கப்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம் என முதல்வர் சேகரன் தெரிவித்தார்.
