UPDATED : ஆக 02, 2009 12:00 AM
ADDED : ஆக 02, 2009 01:19 PM
அ நிறம் | அளவு
ஐ.டி., துறையில் சேர்ந்திடும் பிரெஷர்களுக்கான பயிற்சிக் காலமானது இரட்டிப்பாக்கப்படும் சூழல் அத்துறையில் தற்போது காணப்படுகிறது.
எதிர்கால துறைத் தேவைகளை சந்திக்கும் திறனை அவர்கள் பெற இந்த கூடுதல் பயிற்சி உதவும் என துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்தக் கூடுதல் பயிற்சிக்காக அதிக செலவானாலும் இது எதிர்காலத்தில் சிறப்பான பலனைத் தரும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. மேலும் வருமானம் தரும் திட்டங்களில் அவர்களை பணியில் அமர்த்துவதை சற்றே தாமதப்படுத்தும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டி.சி.எஸ்., இதுபோல சமீபத்தில் பயிற்சிக் காலத்தை 3 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக அதிகரித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்திலும் இது போன்ற பயிற்சிக் கால அதிகரிப்பு சமீபத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
