தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தூர்தர்ஷன், ஏ.ஐ.ஆர்.,ல் 11 ஆயிரம் பணியிடம் காலி

தூர்தர்ஷன், ஏ.ஐ.ஆர்.,ல் 11 ஆயிரம் பணியிடம் காலி

தூர்தர்ஷன், ஏ.ஐ.ஆர்.,ல் 11 ஆயிரம் பணியிடம் காலி


UPDATED : ஆக 04, 2009 12:00 AM

ADDED : ஆக 04, 2009 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2009 12:00 AM ADDED : ஆக 04, 2009 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
தூர்தர்ஷன் மற்றும் ஆல்இந்தியா ரேடியோவில், 11 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, ராஜ்யசபாவில் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, ராஜ்யசபாவில் பதிலளித்த தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் மோகன் ஜாதுவா கூறியதாவது:
இன்ஜினியரிங் பிரிவில், ஆல் இந்தியா ரேடியோவில், 1,284 பணியிடங்களும், தூர்தர்ஷனில் 2,714 பணியிடங்களும் காலியாக உள்ளன. அதேபோல் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில், ஆல் இந்தியா ரேடியோவில் 3,010 பணியிடங்களும், தூர்தர்ஷனில், 736 பணியிடங்களும் காலியாக உள்ளன.
செய்தி பிரிவில் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனில் முறையே 55 மற்றும் 39 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தமாக, ஆல் இந்தியா ரேடியோவில், 7,277 பணியிடங்களும், தூர்தர்ஷனில் 4,221 பணியிடங்களும், காலியாக உள்ளன. இவ்வாறு இணை அமைச்சர் ஜாதுவா கூறினார்.
 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us