வேதாந்த பல்கலை துணைவேந்தராக சாம் பிட்ரோடா நியமனம்
வேதாந்த பல்கலை துணைவேந்தராக சாம் பிட்ரோடா நியமனம்
UPDATED : ஆக 04, 2009 12:00 AM
ADDED : ஆக 04, 2009 12:38 PM
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் உருவாக உள்ள வேதாந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சாம் பிட்ரோடா நியமிக்கப்பட உள்ளார்.
ஒரிசா மாநிலத்தின் புரி மாவட்டத்தில் 6,000 ஏக்கர் பரப்பளவில், 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வேதாந்த பல்கலைக்கழகம் அமைய உள்ளது. ஒரு லட்சம் மாணவர்கள், 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் துவக்கப்படவுள்ள இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பிரபல தொலைத்தொடர்புத் துறை நிபுணர் சாம் பிட்ரோடாவை நியமிக்க ஆலோசனை நடந்து வருவதாக, ஒரிசா உயர்கல்வித் துறை அமைச்சர் தேவி பிரசாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
‘தொலைபேசி துறையில் புரட்சியை ஏற்படுத்திய சாம் பிட்ரோடா, ஒரிசாவில் பிறந்தவர். எனவே, அவரை துணை வேந்தராக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், நோபல் பரிசு பெற்ற மூன்று பேரை பல்கலைக்கழக கவுர உறுப்பினர்களாக பொறுப்பேற்கும்படி மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது’ என தேவி பிரசாத் மிஸ்ரா, சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
