அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ‘எட்கேடமி மதிப்பீட்டு தளம்’ அறிமுகம்
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ‘எட்கேடமி மதிப்பீட்டு தளம்’ அறிமுகம்
UPDATED : ஆக 05, 2009 12:00 AM
ADDED : ஆக 05, 2009 11:23 AM
சென்னை: எட்சர்வ் சாப்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்காக, ‘எட்கேடமி மதிப்பீட்டு தளம்’ என்ற இணையதள கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 2009-10ம் கல்வி ஆண்டில், 220 பாடப்பிரிவுகளுக்கான மின்னணு பாடங்களை மாணவர்கள், ‘லாம்ப்ஸ்’ என்ற இணைய தளம் மூலம், 150 எட்சென்டர்களில் பெறலாம். இந்த பயிற்சி மையங்களில், பாடத் திட்டங்களை பெற்று, செமஸ்டர் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
இந்நிறுவனம், ஆந்திர மாநில ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கென, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களுக்குள் 200 புதிய எட்கேடமி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. கல்லூரிகள் தவிர்த்து, வெளியிடங்களில் 1,000 எட்சர்வ் மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
