வேலை கிடைக்காததால் கல்லூரி மீது வழக்கு தொடர்ந்த மாணவி
வேலை கிடைக்காததால் கல்லூரி மீது வழக்கு தொடர்ந்த மாணவி
UPDATED : ஆக 09, 2009 12:00 AM
ADDED : ஆக 09, 2009 11:22 AM
நியூயார்க்: வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய படிப்பு படித்தும் வேலை கிடைக்காததால் அமெரிக்க மாணவி, கல்லூரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
நியூயார்க்கை சேர்ந்தவர் ட்ரினா(27). இங்குள்ள மன்ரோ கல்லூரியில் பி.பி.ஏ., பட்டம் பெற்றார். இந்த கல்லூரியில் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி வங்கியில் 31 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் படிப்பை முடித்த பின் பல இடங்களில் விண்ணப்பித்தும் இன்னும் வேலை கிடைக்கவில்லை.
இதனால், கோபமடைந்த ட்ரினா, தான் படித்த கல்லூரிக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘தாய் சொற்ப வருமானத்தில் ஆசிரியையாக உள்ளார். தந்தை இறந்து விட்டார். வங்கியில் கடன் வாங்கி படித்தேன். உடனே வேலை கிடைத்திருந்தால் வங்கி கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்திருப்பேன்.
தற்போது வேலையில்லாத நிலையில், வங்கி கடன் வட்டியும் அதிகரித்து வருகிறது. படித்த படிப்புக்கு வேலைக் கிடைக்காததால் மன்ரோ கல்லூரி நிர்வாகம், படிப்புக்காக நான் செலுத்திய 31 லட்ச ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும்’ என கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார். ‘வேலை கிடைக்காததற்காக எங்கள் கல்லூரி மீது ட்ரினா, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது நியாயமில்லாதது’ என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
