UPDATED : ஆக 12, 2009 12:00 AM
ADDED : ஆக 12, 2009 05:54 PM
அ நிறம் | அளவு
கோவை: ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ நேரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் சார்பில் பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு தடாகம் ரோடு, காந்தி பார்க், சிவசுப்ரமணியம் ரோடு, டி.பி.ரோடு, சம்பந்தம் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
165 மாணவ மாணவியர் பேரணியில் பங்கேற்றனர். பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை கையில் பிடித்தபடி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
