முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்ஜி., வகுப்புகள் இன்று துவக்கம்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்ஜி., வகுப்புகள் இன்று துவக்கம்
UPDATED : செப் 03, 2018 12:00 AM
ADDED : செப் 03, 2018 10:17 AM
பிளஸ் 2 முடித்த மாணவர்கள்,
அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த
மாணவர்களுக்கு, ஆக., 19ல், கல்லுாரிகள் துவங்கின. முதல் வாரத்தில், மாணவர்கள் மற்றும்
பெற்றோருக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி தரப்பட்டது.பின், மாணவர்களுக்கு யோகா வகுப்பு,
நல்லொழுக்கம் சார்ந்த பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆக., 27 முதல், 31 வரை, பிளஸ்
1, பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்பட்டன.இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, இன்று
முதல் இன்ஜினியரிங் பாடங்கள் நடத்தப்பட உள்ளன. ஆங்கில மொழியில் பின்தங்கிய மாணவர்களுக்கு,
ஆங்கில பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும் என, அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும்,
அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
இன்ஜினியரிங் முதலாமாண்டு
மாணவர்கள், முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகளில்,அதிக அளவில் தோல்வியுறுவது வழக்கமாக
உள்ளது. இந்த முறை, அதுபோன்ற தோல்விகள் இன்றி, மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்,
முதலாண்டில் சிறப்பு வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் வழங்கவும், அண்ணா பல்கலை
அறிவுறுத்தியுள்ளது.
