தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட பல்கலையில் 8ல் பட்டமளிப்பு

சட்ட பல்கலையில் 8ல் பட்டமளிப்பு

சட்ட பல்கலையில் 8ல் பட்டமளிப்பு


UPDATED : செப் 03, 2018 12:00 AM

ADDED : செப் 03, 2018 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2018 12:00 AM ADDED : செப் 03, 2018 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு சட்ட பல்கலையில், 8ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.இது குறித்து, சட்ட பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு, அம்பேத்கர் சட்ட பல்கலை பட்டமளிப்பு விழா, 8ம் தேதி காலை, 10:45 மணிக்கு, பெருங்குடி வளாகத்தில் உள்ள, சட்ட பல்கலை அரங்கில் நடக்கிறது.

இதில், பல்கலையின் இணைப்பு பெற்ற, சட்ட கல்லுாரிகள் மற்றும் சீர்மிகு சட்ட பள்ளி ஆகியவற்றில், 2015 - 16ம் கல்வியாண்டு முதல், 2017 - 18 வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பட்டம் வழங்கப்படுகிறது.

மூன்று கல்வியாண்டுகளிலும், முனைவர் பட்டம், பல்கலை பதக்கம், அறக்கட்டளைநிதியம் வழங்கும் பதக்கம் மற்றும் உதவித்தொகை பெற தேர்வானவர்களுக்கு மட்டும், இந்த விழாவில் பட்டம் வழங்கப்படும்.மற்றவர்களுக்கு, அவரவர் கல்லுாரி நடத்தும், பட்டமளிப்பு நாள் விழாவில், பட்டம் வழங்கப்படும். அதற்கான அறிவிப்பு, சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் வழியே அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us