கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டுங்கள்: மாணவர்களுக்கு கமிஷனர் அறிவுரை
கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டுங்கள்: மாணவர்களுக்கு கமிஷனர் அறிவுரை
UPDATED : செப் 03, 2018 12:00 AM
ADDED : செப் 03, 2018 10:32 AM
சென்னை : &'&'கத்தியை தீட்டாமல்,
மாணவர்கள் தங்கள் புத்தியை தீட்ட வேண்டும்,&'&' என, போலீஸ் கமிஷனர்,ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை
வழங்கினார்.
சென்னை மாநிலக் கல்லுாரி
மாணவர்கள், மாநகர பேருந்தின் படிக்கட்டில் அமர்ந்து, கத்தியை சாலையில் தீட்டியபடியே
பயணித்த சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று மாநிலக்கல்லுாரியில், பல்வேறு சாதனைகளை புரிந்த
மாணவர்களை பாராட்டி, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் பேசிய தாவது:
மாணவர்கள், கத்தி கலாசாரத்தை
கையில் எடுக்கக்கூடாது. ஒருபோதும், போராட்டக்காரர்களின் பின்னால் செல்லக்கூடாது. சிந்திக்க
வேண்டிய வயதில், போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்த பருவத்தில், கத்தியை
தீட்டாமல், புத்தியை தீட்ட வேண்டும். நான் கூட, அரசு பள்ளியிலும், கல்லுாரிகளிலும்
படித்தவன் தான். அவ்வாறு படித்து தான், ஐ.பி.எஸ்., அதிகாரிஆகி, இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
மாணவர்கள், கல்லுாரியில்
படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.
ஒரு சிலர் செய்யும் தவறால், ஒட்டுமொத்த கல்லுாரி மாணவர்களுக்குமே, கெட்ட பெயர் வந்து
விடுகிறது. இதனால், அனைவரின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. நேற்று, ஒரு சிலர், பொதுமக்கள்
முன்னிலையில், பேருந்தில் கத்தியைக் காட்டி சென்றதால், இன்றைய ஊடகங்களில், அந்த காட்சி
திரும்ப திரும்பக் காட்டப்படுகிறது.
கண்காணிப்பு கேமராக்களில்
பதிவான காட்சிகளைக் கொண்டு, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, கைது செய்து
வருகிறோம். கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடம், மாணவர்களும்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
