UPDATED : செப் 04, 2018 12:00 AM
ADDED : செப் 04, 2018 10:24 AM
நாகப்பட்டினம்
: கேரள மக்களின் துயர் தீர்க்க, ஒன்பது மாணவர்கள், தாங்கள் வசூலித்த நிதியை, நாகை
கலெக்டரிடம் வழங்கினர்.
நாகை, கோட்டை வாசல்படியைச் சேர்ந்த, ஒன்பது மாணவ - மாணவியர், ஒன்று முதல், 10ம்
வகுப்பு வரை, வெவ்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள், கேரளா
மாநிலத்தில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாகையில் பல்வேறு
தரப்பினரிடம் நிதி திரட்டினர்.
தாங்கள் திரட்டிய நிதி, 25 ஆயிரத்து, 618 ரூபாயை, &'டிடி&' எடுத்து, நேற்று,
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர்
சுரேஷ்குமாரிடம் வழங்கினர். மாணவர்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.
இதேபோல,
புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளியில், 45 மாணவர்கள், படித்து
வருகின்றனர். இவர்கள், கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நான்கு
வாரங்களாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும், 20 ஆயிரத்து, 639 ரூபாய் நிதி
திரட்டினர். இத்தொகையை நேற்று, மாவட்ட கலெக்டர் கணேஷிடம் வழங்கினர்.
