கல்வி நிறுவன கட்டட வரன்முறை : செப்., 14ல் முடிகிறது அவகாசம்
கல்வி நிறுவன கட்டட வரன்முறை : செப்., 14ல் முடிகிறது அவகாசம்
UPDATED : செப் 04, 2018 12:00 AM
ADDED : செப் 04, 2018 10:26 AM
தமிழகத்தில்,
கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, வரன்முறை கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 14ம்
தேதியுடன் முடிகிறது. அதனால், சில மாதங்களுக்கு, அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,
அனுமதியின்றி, ஏராளமான கல்வி நிறுவனங்கள், கட்டடங்களை கட்டியுள்ளன.
இந்த கட்டடங்களுக்கு,
அந்தந்த பகுதி, ஊராட்சி நிர்வாகத்தில் மட்டுமே, அனுமதி பெறப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.நகர், ஊரமைப்பு சட்டப்படி, டி.டி.சி.பி., அனுமதி பெறாமல் கட்டப்பட்ட
வளாகங்கள், விதிமீறல் கட்டடங்களாகவே வகைபடுத்தப்படும். இக்கட்டடங்களில், பள்ளிகள்,
கல்லுாரிகள் செயல்பட, சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெற முடியாது.இதுபோன்ற
கட்டடங்களை, சில நிபந்தனைகள் அடிப்படையில், வரன்முறை செய்வதற்கான திட்டம், ஜூன்,
14ல் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 2011
ஜன., 1க்கு முன் கட்டப்பட்ட, கல்வி நிறுவன கட்டடங்கள், வரன்முறைக்கு தகுதி பெறும்.கட்டடங்களின்
தள பரப்பில், சதுர அடிக்கு, 7.50 ரூபாய் அடிப்படையில், வரன்முறை கட்டணம் செலுத்த
வேண்டும். இதை பயன்படுத்தி, பல்வேறு கல்வி நிறுவனங்கள், &'ஆன்லைன்&' முறையில்
விண்ணப்பித்துள்ளன.
இதுகுறித்து, டி.டி.சி.பி., அதிகாரிகள் கூறியதாவது:கல்வி நிறுவன கட்டடங்களுக்கு
வரன்முறை கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 14ல் நிறைவடைகிறது. ஆரம்பத்தில்
பல்வேறு குழப்பங்கள் காரணமாக, பல கல்வி நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.
கல்வித்துறை மண்டல அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தபின், பல கல்வி நிறுவனங்கள்,
விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பதை,
அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
