தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மழையில் ஒழுகும் பள்ளி குடையுடன் மாணவர்கள்

மழையில் ஒழுகும் பள்ளி குடையுடன் மாணவர்கள்

மழையில் ஒழுகும் பள்ளி குடையுடன் மாணவர்கள்


UPDATED : செப் 04, 2018 12:00 AM

ADDED : செப் 04, 2018 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2018 12:00 AM ADDED : செப் 04, 2018 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லக்னோ: உ.பி.,யில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் மேற்கூரை ஒழுகுவதால், பள்ளி மாணவர்கள், கையில் குடையுடன், வகுப்பறையில் பாடம் படிக்கும், &'வீடியோ&' மற்றும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

 

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பாராபங்கி மாவட்டத்தில், அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இரண்டு அறைகளை உடைய இந்த பள்ளியின் கட்டடம், பராமரிப்பின்றி பலவீனமான நிலையில் உள்ளது. மழை காலத்தில், வகுப்பறையின் மேற்கூரை ஒழுகுவது, வழக்கமாக உள்ளது. இதனால், மழைக் காலத்தில், பள்ளி மாணவர்கள், வகுப்பறையில், கையில் குடையுடன் பாடம் படிக்கின்றனர்.

 

இந்த பள்ளி மாணவர்கள், ஒரு கையில் குடையுடன், மற்றொரு கையால், பாடம் எழுதும் வீடியோ மற்றும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில், சமீபத்தில் பகிரப்பட்டது. &'&'பள்ளி கட்டடத்தின் நிலை தொடர்பாக, மாநில கல்வி துறைக்கு பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை,&'&' என, அப்பள்ளி ஆசிரியர், சுனிதா மிஸ்ரா தெரிவித்தார். இதையடுத்து, அந்த பள்ளியை, உடனடியாக வேறு கட்டடத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், விரைவில், அந்த கட்டடம் புதுப்பிக்கப்படும் என்றும், மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us