மருத்துவ கல்வி கட்டணம் : யு.ஜி.சி., புதிய அறிவிப்பு
மருத்துவ கல்வி கட்டணம் : யு.ஜி.சி., புதிய அறிவிப்பு
UPDATED : செப் 05, 2018 12:00 AM
ADDED : செப் 05, 2018 10:22 AM
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு,
&'நீட்&' நுழைவு தேர்வு கட்டாயம் ஆவதற்கு முன், தனியார் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில்
சேர, லட்சக்கணக்கில் நன்கொடை தர வேண்டியிருந்தது. &'நீட்&' தேர்வுக்கு பின், நன்கொடை
பெறுவதை கல்லுாரிகள் நிறுத்தின. அதற்கு பதிலாக, கல்வி கட்டணத்தை, பல கல்லுாரிகளும்,
தனியார் பல்கலைகளும், பல மடங்கு உயர்த்தி விட்டன.
எனவே, நீட் தேர்வில் தேர்ச்சி
பெற்றாலும், தனியார் கல்வி நிறுவனங்களில் சேருவோர், லட்சக்கணக்கில், மருத்துவ கல்வி
கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி கவுன்சில், யு.ஜி.சி.,
மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு, புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இதற்கிடையில், &'மருத்துவ
கல்வி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்&' என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றமும்
உத்தரவிட்டது. அதன்படி, மருத்துவ கல்வி கட்டண நிர்ணய கமிட்டியை, யு.ஜி.சி., அமைத்துள்ளது.
கட்டணம் நிர்ணயிக்கும் முன், பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் கல்வி
நிறுவனங்களிடம் இருந்து, கருத்துகளை பெற, முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, யு.ஜி.சி.,
சார்பில், அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், &'மருத்துவ கல்வி கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால், பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். &'வரும், 15க்குள், யு.ஜி.சி.,யின், dufeeregulation.ugc@gmail.com என்ற, இ - -மெயில் முகவரியில், கருத்துகளை அனுப்ப வேண்டும்&' என, கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
