அண்ணா பல்கலையில், ராகிங் ஒழிக்க கண்காணிப்பு வாகனம்
அண்ணா பல்கலையில், ராகிங் ஒழிக்க கண்காணிப்பு வாகனம்
UPDATED : செப் 05, 2018 12:00 AM
ADDED : செப் 05, 2018 10:25 AM
அண்ணா பல்கலையில், முதலாமாண்டு
மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கிய நிலையில், &'ராகிங்&'கில் ஈடுபடக்கூடாது என, &'சீனியர்&'
மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங்
படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஒருங்கிணைப்பு பயிற்சி மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2
பாடங்களுக்கான திருப்புதல் வகுப்புகள், ஒரு வாரமாக நடந்தன. நேற்று முதல், இன்ஜினியரிங்
பாட வகுப்புகள் துவங்கின. இதையொட்டி, சென்னை, அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில்
சேர்ந்த மாணவர்களுக்கு, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வகுப்பு வாரியாக, பேராசிரியர்கள்,
மாணவர்கள் இடம் பெற்ற, ராகிங் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.அத்துடன், பல்கலை
வளாக கண்காணிப்புக்கு, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ராகிங் குறித்து
புகார் வந்தாலும், வளாக கண்காணிப்பு கேமராவில், ராகிங் சார்ந்த பதிவுகள் இருந்தாலும்,
சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
பல்கலை வளாகம் முழுவதையும்
கண்காணிக்கும் வகையில், ராகிங் கண்காணிப்பு வாகனம், ரோந்து வரவும் உத்தரவிடப்பட்டு
உள்ளது. ராகிங் தடுப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, பேராசிரியர்களுக்கும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லுாரி முதல்வர் அறை முன், ராகிங் தடுப்பு பதிவு புத்தகம்
மற்றும் புகார் பெட்டி வைக்கவும், அதில், மாணவர்கள் தைரியமாக, தங்கள் புகார்களை பதிவு
செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
