UPDATED : செப் 05, 2018 12:00 AM
ADDED : செப் 05, 2018 10:30 AM
சென்னை: நான்கு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் துவங்க அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் விபரம்:
● விழுப்புரம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தலா, 20 இடங்களுடன், விபத்து
மற்றும் அவசர சிகிச்சை பட்டப்படிப்பு; அறுவை சிகிச்சை மயக்கவியல் பட்டப்படிப்பு; கதிரியல்
நோயறிதல் பட்டப்படிப்பு; கண் பரிசோதனை பட்டப்படிப்பு; நான்கு இடங்கள் கொண்ட, இருதய
சிகிச்சை பட்டப்படிப்பு
● புதுக்கோட்டை, அரசு மருத்துவக்
கல்லுாரி மருத்துவமனையில், தலா, 20 இடங்களுடன், விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பட்டப்படிப்பு;
அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் பட்டப்படிப்பு
● மதுரை, அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனையில், 20 இடங்களுடன், சிறுநீரக ரத்த பகுப்பாய்வு பட்டப்படிப்பு
● வேலுார், அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில், தலா, 20 இடங்களுடன், மருத்துவ ஆய்வக பரிசோதனை பட்டப்படிப்பு
மற்றும் மருத்துவ உதவியாளர் பட்டப்படிப்பு.நான்கு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும்,
184 இடங்களுடன் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், இக்கல்வியாண்டு முதல் துவக்கப்பட
உள்ளன. இந்த இடங்கள், விதிமுறைகளை பின்பற்றி, மருத்துவ கல்வி இயக்கக தேர்வு குழு வழியே
நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பாணை, விரைவில் வெளியிடப்படும்.
