தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘மோமோ’ எனும் ஆபத்து!

‘மோமோ’ எனும் ஆபத்து!

‘மோமோ’ எனும் ஆபத்து!


UPDATED : செப் 07, 2018 12:00 AM

ADDED : செப் 07, 2018 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2018 12:00 AM ADDED : செப் 07, 2018 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘மோமோ சேலஜ்’ எனும் ஆன்லைன் விளையாட்டில் பங்கெடுக்க தூண்டும் வகையில், ‘வாட்ஸ் ஆப்’பில் வலம் வரும் அழைப்புகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்குமாறு, இந்தியன் சர்டிபிகேட் ஆப் செக்ண்ட்ரி எஜுகேஷன் (ஐ.சி.எஸ்.இ.,) வாரியம், பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது!

மொபைல் மற்றும் ஆன்லைன் வாயிலாக விளையாடப்படும் ‘புளூவேல்’ எனும் ஆபத்துமிக்க விளையாட்டு சில காலங்களுக்கு முன்பு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபகாலமாக, ‘மோமோ’ எனும் மற்றொரு அபாயகரமான  விளையாட்டு பரவலாக பேசப்பட்டுவருகிறது.  

இந்நிலையில், இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகள் விலகி இருக்கும் வகையில், அவர்களை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தியுள்ள ஐ.சி.எஸ்.இ., வாரியம் பள்ளிகளில் வகுப்பு நேரத்திற்கு முன்பு நடைபெறும் வழிபாட்டு கூட்டங்கள் வாயிலாகவும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்த உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us