UPDATED : அக் 04, 2009 12:00 AM
ADDED : அக் 04, 2009 05:48 PM
இந்தியாவில் பண்டிகைக் காலம் துவங்கியதாலும் தனி நபரின் விருப்பச் செலவுகள் அதிகரித்து வருவதாலும் இந்தியாவிலுள்ள ரீடெயில் துறையினர் விரிவாக்கத் திட்டங்களை மீண்டும் முழு வீச்சில் செயல்படுத்த எண்ணியுள்ளனர். அடுத்த 3 ஆண்டுகளில் ரஹேஜா குழுமத்தின் ஷாப்பர்ஸ் ஸ்டாப் புதிதாக 12 கிளைகளை துவங்கிட திட்டமிட்டுள்ளது.
இதே நிறுவனம் இந்த ஆண்டுக்குள் 4 முதல் 5 கிராஸ்வேர்ட் புத்தகக் கடைகளையும் துவங்கவுள்ளது. இதனால் இந்த நிதியாண்டுக்குள் 1000 பேருக்கு புதிய பணிகள் கிடைத்திடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆதித்யா பிரர்லாவின் ரீடெயில் பிரிவான மோர் நிறுவனமானது அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 18 மெகா கடைகளைத் திறக்கவுள்ளது.
ஆர்.பி.ஜி., குழுமத்தைச் சார்ந்த ஸ்பென்சர்ஸ் ரீடெயில் நிறுவனமானது அடுத்த 3 ஆண்டுகளில் விரிவாக்கத்தில் இறங்கவுள்ளது. மேலும் பாண்டலூன் ரீடெயில் இந்தியா,புரவோக், டைட்டன் போன்ற நிறுவனங்கள் கிளை விரிவாக்கம் செய்யவுள்ளதால் ரீடெயில் துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் தோன்றிடும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பது இளைஞர்களுக்கான நற்செய்தி தான்.
