sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘நாட்டில் ஓராசிரியர் பள்ளியே இருக்கக் கூடாது’

‘நாட்டில் ஓராசிரியர் பள்ளியே இருக்கக் கூடாது’

‘நாட்டில் ஓராசிரியர் பள்ளியே இருக்கக் கூடாது’


UPDATED : அக் 05, 2009 12:00 AM

ADDED : அக் 05, 2009 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2009 12:00 AM ADDED : அக் 05, 2009 05:32 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ப.சிதம்பரம் பேசுகையில், “அடுத்த தலைமுறையை ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு ஏன் பணி கிடைக்கவில்லை என தெரியவில்லை. நம்நாட் டில் எட்டு லட்சம் பள்ளிகள் உள்ளன. ஓராசிரியர் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் எப்படி பாடம் நடத்துவார்?. இதை மாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
ஓராசிரியர் பள்ளிகளை தரம் உயர்த்தவும், அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது மூன்று ஆசிரியர்களை நியமிக்கவும் அறிவுறுத்தினோம். இதை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை. நாடு முழுவதும் நான்கு லட்சத்து 17 ஆயிரம் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இங்கு மேலும் ஒரு ஆசிரியர் நியமிக்க மாநில அரசுகள் அக்கறை காட்ட வேண்டும்,” என்றார்.
விழாவில் தாளாளர் எல்.பெரியதம்பி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.தண்டபாணி வரவேற்றார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சுந்தரம் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் முத்துதுரை, ஊராட்சி ஒன்றிய தலைவர் பெருமாள், தி.மு.க., நகர் செயலாளர் துரை கணேசன் குத்துவிளக்கேற்றினர். முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார். வி. சேலஞ்சர்ஸ் மெட்ரிக்., பள்ளி தாளாளர் வைரவ சுந்தரம், சக்தி அறக்கட்டளை  நிர்வாக இயக்குனர்கள் பெரி.செந்தில் குமார், பி.சுகுமாறன், பெரி. வெங்கடேசன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us