UPDATED : அக் 07, 2009 12:00 AM
ADDED : அக் 07, 2009 02:46 PM
கோவை: கோவை சென்னனூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நக்கீரனுக்கு, சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் வழங்கப்பட்டது.
சிறந்த முறையில் கற்பித்தல் பற்றி அவர் கூறியதாவது:
சிறந்த ஆசிரியருக்கான விருது கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆசிரியர் பணி என்பது என்னுடைய தொழில். நமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே லட்சியம். ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் உள்ள படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களை அடிக்கவோ மிரட்டவோ கூடாது. சிறந்த மாணவர்களுடன் அவர்களை பழக அனுமதிக்க வேண்டும்.
வீட்டில் பெற்றோர் படிக்காதவர்களாக இருந்தாலும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவனிடம் பள்ளியில் என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என தினமும் கேட்க வேண்டும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாடங்களை முதலில் புரிந்து கொண்டு பின் மனப்பாடம் செய்யலாம்.
நன்கு படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க பரிசுத் தொகை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மாணவர்களின் பெற்றோரையும் எனக்குத் தெரியும். இது மாணவர்களுக்கும் தெரியும் என்பதால் கவனமாக படிக்கின்றனர். மாணவர்களை அடித்து மிரட்டி படிக்க வைப்பதை விட, அன்பால் படிக்க வைப்பது எளிது. இவ்வாறு, தலைமை ஆசிரியர் நக்கீரன் கூறினார்.
