UPDATED : அக் 12, 2009 12:00 AM
ADDED : அக் 13, 2009 12:05 PM
சென்னை கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ரவி இதில் பங்கேற்று பேசுகையில், “மொபைல் போன், இன்டர்நெட் ஆகிய தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக, குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. சோசியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களில் மாணவியர் தங்களது மொபைல் எண், முகவரி உட்பட சுய தகவல்களை அளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முன்பின் தெரியாத நபர்களிடம் ‘சாட்டிங்’ செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
மொபைல் போன்களை சர்வீஸ் சென்டர்களில் கொடுக்கும் முன் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். மொபைல்போன்களில் உள்ள தொடர்பு எண்கள், போட்டோக்கள் ஆகியவை பிரதியெடுக்கப்படுகின்றன. இதனால், பல்வேறு விதமான தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதுகுறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன. இயற்கையாகவே, விஞ்ஞான அறிவை பெண்கள் அதிகளவில் பெற்றுள்ளனர்; அவர்களுக்கு ஜீன்களும் அதிகம். எனவே, சைபர் குற்றங்களுக்கு ஆளாகாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.” என்றார்.
முன்னதாக, கல்லூரி மாணவியர் நாடகத்தின் மூலமாக சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கேந்திரிய வித்யாலயா, ராணி மேரி கல்லூரி, அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் மகளிர் கிறித்தவ கல்லூரி மாணவியர் ஏற்கனவே விழிப்புணர்வு முகாம்களை நடத்து வந்துள்ளனர். ‘இம்முகாம் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் நடத்தப்படும்’ என்று மாணவியர் தெரிவித்தனர்.
