‘வரும் கல்வியாண்டில் இரு அரசு மருத்துவக் கல்லூரிகள்’
‘வரும் கல்வியாண்டில் இரு அரசு மருத்துவக் கல்லூரிகள்’
UPDATED : அக் 22, 2009 12:00 AM
ADDED : அக் 22, 2009 11:14 AM
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரிக்காக முதற்கட்டமாக 58 கோடி ரூபாய் மதிப்பில் முதலாமாண்டு வகுப்புகள் துவங்க கட்டடங்கள் கட்டப்பட்டு, 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இரண்டாவது கட்டமாக இரண்டாமாண்டு மாணவர்களுக்காக 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த கட்ட பணிக்காக ரூபாய் 23 கோடியில் பணிகள் மேற்கொள்ள அடுத்த மாதம் 4ம் தேதி ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் விழுப்புரம் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்படத்துவங்கும். விழுப்புரம் அரசு மருத்துவமனை அனைத்து நவீன கருவிகள் அமைத்து சிறந்த வசதிகளுடன் செயல்படும். மதுரை, சென்னை போன்ற மருத்துவமனைகளில் உள்ளதைப்போல் நவீன கருவிகளை கொண்டு இந்த மருத்துவமனை செயல்பட துவங்கும்.
அமைச்சர் பொன்முடி கூறுகையில்,‘ மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக இந்தாண்டே எம்.சி.ஐ.,யின் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். இக்கல்லூரி அனைத்து வசதிகளும் கொண்டதாக இயங்கும்’ என்றார்.
