பிளஸ் 2 முடித்தவர்கள் தொழிலாளர் மேலாண்மை படிக்கலாம்
பிளஸ் 2 முடித்தவர்கள் தொழிலாளர் மேலாண்மை படிக்கலாம்
UPDATED : ஆக 07, 2020 12:00 AM
ADDED : ஆக 07, 2020 10:28 AM
சென்னை;
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் பட்டப் படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பி.ஏ., தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு; எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை பட்ட மேற்படிப்பு; பி.ஜி.டி.எல்.ஏ., தொழிலாளர் நிர்வாகத்தில், முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு, தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பட்டப்படிப்பில் சேரலாம். முதுநிலை படிப்புகளுக்கு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை, tilschemmai@tn.gov.in என்ற, &'இ- மெயில்&' வழியாக பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 13ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.விபரங்களுக்கு, 044 - 2844 0102, 2844 5778 ஆகிய, எண்களை, தொடர்பு கொள்ளலாம்.
