தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச அளவில் 6.32 லட்சம் குழந்தைகளை தாக்கிய கொரோனா

சர்வதேச அளவில் 6.32 லட்சம் குழந்தைகளை தாக்கிய கொரோனா

சர்வதேச அளவில் 6.32 லட்சம் குழந்தைகளை தாக்கிய கொரோனா


UPDATED : ஆக 07, 2020 12:00 AM

ADDED : ஆக 07, 2020 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2020 12:00 AM ADDED : ஆக 07, 2020 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச அளவில் 6.32 லட்சம் குழந்தைகள், 39 லட்சம் முதியவர்களை கொரோனா தாக்கி இருப்பது உலக சுகாதார நிறுவனத்தின் சர்வேயில் தெரியவந்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1.84 கோடி. பலியானோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 96 ஆயிரத்து 147 ஆகும். ஜன., முதல் ஜூலை இறுதி வரை 1.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களை வைத்து உலக சுகாதார நிறுவனம் ஒரு சர்வே மேற்கொண்டது. அதன் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

53 சதவீதம் ஆண்கள் பாதிப்பு

அதன்படி, 53 சதவீதம் ஆண்களும், 47 சதவீதம் பெண்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். 14 வயதிற்குட்பட்ட 6.32 லட்சம் குழந்தைகளை கொரோனா தாக்கி இருக்கிறது. இதில் 4 வயதிற்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 2.05 லட்சம்.25-64 வயதிற்கு உட்பட்டவர்கள் 64 சதவீதம். இவர்கள் மட்டும் 1.09 கோடி பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். 65 வயதை கடந்த முதியவர்கள் 39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 5.81 லட்சமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us