தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?


UPDATED : ஆக 07, 2020 12:00 AM

ADDED : ஆக 08, 2020 03:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2020 12:00 AM ADDED : ஆக 08, 2020 03:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆக.,10ம் தேதி வெளியாக உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. 
பள்ளி மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி, காலை 09:30 மணிமுதல் அனுப்பப்பட உள்ளது. 
www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.inஆகிய இணையதளம் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
ஆக., 17 முதல் 21ம் தேதிவரை பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியர் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
குறை தீர்த்தல்

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்கு பதிலாக, மாணவர்கள் பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக அரசு தேர்வுத் துறை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆக., 17 முதல் 25ம் தேதிவரை மாணவர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மாணவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் வாயிலாகவே முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us