தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டில் குளறுபடி; யு.பி.எஸ்.சி.,க்கு நோட்டீஸ்

மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டில் குளறுபடி; யு.பி.எஸ்.சி.,க்கு நோட்டீஸ்

மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டில் குளறுபடி; யு.பி.எஸ்.சி.,க்கு நோட்டீஸ்


UPDATED : ஆக 11, 2020 12:00 AM

ADDED : ஆக 11, 2020 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2020 12:00 AM ADDED : ஆக 11, 2020 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி;
மத்திய அரசுப் பணியில், மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கணக்கிடப்படுகிறது என்பதை விளக்குமாறு, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு, டில்லி உயர் நீதிமன்றம், &'நோட்டீஸ்&' அனுப்பியுள்ளது.
சம்பவானா என்ற தொண்டு நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. 
அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில், உத்தேசமாக காலியாகும், 796 இடங்களை நிரப்புவதற்கான, முதற்கட்ட தேர்வு, அக்.,4ல் நடைபெறும் என, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
அதில், சட்டப்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு, 4 சதவீதம், அதாவது, 32 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், யு.பி.எஸ்.சி., அறிக்கையின்படி, 24 இடங்கள் தான் வருகின்றன. மேலும், மாற்றுத் திறனாளிகளில், கண் பார்வையற்றோர், காது கேளாதோர், புற உறுப்பு பாதிக்கப்பட்டோருக்கு, தலா, 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, சட்டம் கூறுகிறது. அதிலும், யு.பி.எஸ்.சி., கணக்கீடு குளறுபடியாக உள்ளது.
மேலும், யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில், பூர்த்தியாகாத, காலியிடங்களின் ஒதுக்கீடு குறித்த விபரங்களும் இல்லை.எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து, தெளிவான விபரத்தை வெளியிட, யு.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நேற்று, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, டி.என்.படேல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு பணிகளுக்கான தேர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பதை தெரிவிக்குமாறு, யு.பி.எஸ்.சி., மற்றும் மத்திய அரசுக்கு, &'நோட்டீஸ்&' அனுப்ப, அமர்வு உத்தரவிட்டது. அத்துடன், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், பூர்தியாகாத காலியிடங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்ற விபரத்தையும் தாக்கல் செய்யுமாறு கூறி, விசாரணையை, வரும், 31ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us