மத்திய அரசு பணிகளில் வட மாநிலத்தவர் பணியமர்வை தடுக்க வேண்டும்: எஸ்.ஆர்.எம்.யு., கோரிக்கை
மத்திய அரசு பணிகளில் வட மாநிலத்தவர் பணியமர்வை தடுக்க வேண்டும்: எஸ்.ஆர்.எம்.யு., கோரிக்கை
UPDATED : ஆக 11, 2020 12:00 AM
ADDED : ஆக 11, 2020 11:45 AM
சென்னை:
&'&'மத்திய அரசு பணிகளில், வட மாநிலத்தினர் அதிகம் பணியமர்த்தப்படுவதை, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தடுக்க வேண்டும்,&'&' என, எஸ்.ஆர்.எம்.யு., துணை பொதுச்செயலர் வீரசேகரன் தெரிவித்தார்.
ரயில் நிலையங்களையும், பயணியர் ரயில்களையும் தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி, ரயில்வேயில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களை, தற்காலிக தொழிலாளர்களாக மாற்றக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.எம்.யு., சார்பில், திருச்சியில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் பங்கேற்ற எஸ்.ஆர்.எம்.யு., துணை பொதுச்செயலர் வீரசேகரன் கூறியதாவது:
சேவை துறையான ரயில்வேயில் லாப நோக்கம் பார்க்கக் கூடாது. ரயில்வே துறையை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், ரயில் நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும். மற்ற மாநிலங்களில், மத்திய அரசு பணியிடங்களில், அந்த மாநில மக்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், வட மாநிலத்தினர் அதிகம் பணியமர்த்தப்படுவதை, முதல்வர் இ.பி.எஸ்., தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பொன்மலை முன் ஆர்ப்பாட்டம்திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில், வட மாநிலத்தவர்களுக்கு தொடர்ந்து அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து, கடந்த சில நாட்களாக பொன்மலை பணிமனையை முற்றுகையிட்டு, பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று, தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழி தலைமையில், தி.மு.க.,வினர், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
