தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடநூல் எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு

பாடநூல் எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு

பாடநூல் எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு


UPDATED : அக் 24, 2009 12:00 AM

ADDED : அக் 24, 2009 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2009 12:00 AM ADDED : அக் 24, 2009 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பொது பாடத்திட்டம் எழுத விண்ணப்பித்த 886 ஆசிரியர்களில் இருந்து, தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, வரும் 31ம் தேதி தேர்வு நடக்கிறது.


ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் இளங்கோவன் கூறியிருப்பதாவது:
சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு, வரைவு பாடத்திட்டம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், பாடத் திட்டம் இறுதி செய்யப்படும்.


பொது பாடத்திட்டத்தின்படி, பாடப் புத்தகங்கள் எழுத 886 ஆசிரியர்கள் விண்ணப்பித் துள்ளனர். தமிழ் பாடத்திற்கு அதிகபட்சமாக 306 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களை தேர்வு செய்வதற்காக, வரும் 31ம் தேதி மாவட்ட வாரியாக தேர்வு நடக்கிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வுகள் நடக்கும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.


பாட வாரியான வல்லுனர் குழு, விடைத் தாள்களை மதிப்பீடு செய்து, திறமையான ஆசிரியர்களை நவம்பர் முதல் வாரத்தில் தேர்வு செய்யும் என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us