தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மும்மொழி கொள்கை அவசியம்

மும்மொழி கொள்கை அவசியம்

மும்மொழி கொள்கை அவசியம்


UPDATED : ஆக 17, 2020 12:00 AM

ADDED : ஆக 17, 2020 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2020 12:00 AM ADDED : ஆக 17, 2020 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
மும்மொழி கொள்கை அவசியம். இது குறித்து, தெரியாமல் பேசுவோர் பேச்சை கேட்டு, மக்கள் ஏமாறக் கூடாது, என, அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர், பாலகுருசாமி தெரிவித்தார்.
&'நியூ இந்தியா&' அமைப்பின் சார்பில், மும்மொழி கல்வி கொள்கை குறித்த கூட்டம், &'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக நடந்தது.இதில், தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் வானதி சீனிவாசன் பேசியதாவது:மக்கள் கருத்துக்கு மாற்றாக, தமிழை தாய்மொழியாக கொண்ட, ஏழை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், மூன்றாவது மொழி படிக்க முடியாத நிலை உள்ளது.
மாநிலத்தில், மும்மொழி கொள்கை உள்ளது. தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகள், சில மாவட்டங்களில், மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படுகின்றன. தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும், வாய்ப்பு மறுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:

கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த, புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இது, 500 பக்கங்கள் உடையது. இதை எதிர்ப்பவர்களில், பலர் படிக்கவில்லை; சிலர் புரிந்து கொள்ளவில்லை; சிலர் புரிந்தும் நடிக்கின்றனர்.பொருளாதார வளர்ச்சிக்கு, புதிய படைப்புகள் அவசியம். அதில், இந்தியாவின் பங்களிப்பு, 0.3 சதவீதமாக உள்ளது.
இதனால் தான், 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், வளர்ந்த நாடாகவில்லை. இதற்கு காரணம், கல்வித்தரம் நன்றாக இல்லை.இது மாற, உடனடியாக கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்கள் தரத்தை உயர்த்த வேண்டும். பள்ளிக்கல்வி, உயர் கல்வியில் என்ன செய்ய வேண்டும் என்பதை, புதிய கல்விக் கொள்கை தெரிவித்துள்ளது.தேசிய கல்வி கொள்கையில், ஹிந்தி படிக்க வேண்டும்; சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று கூறவில்லை; எந்த மொழியும் படிக்கலாம். இதை, தமிழக அரசும் எதிர்ப்பது துரதிருஷ்டவசமானது. தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், ஹிந்தி படிப்பது நல்லது. இந்தியாவில், அதிக மக்கள் பேசும் மொழியான ஹிந்தி தெரிந்தால், நம் நாட்டில் எங்கும் பணிபுரியலாம்.
தமிழக அரசு, 48 சதவீதம் உயர் கல்வி சேர்க்கை உள்ளது என, பெருமைப்படுகிறது. அவர்கள் பட்டம் வாங்கிவிட்டு, எங்கு செல்வர்; நாடு முழுதும் செல்ல வேண்டும். அதற்கு ஹிந்தி அவசியம். என் தனிப்பட்ட அனுபவத்தில் கூறுகிறேன்.மும்மொழிக் கொள்கை அவசியம். இது குறித்து தெரியாமல் பேசுவோர் பேச்சை கேட்டு, மக்கள் ஏமாறக் கூடாது.இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us