தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப் பள்ளியில் அடிப்படை ஹிந்தி: வடமாநில குழந்தைகளுக்காக ஏற்பாடு

அரசுப் பள்ளியில் அடிப்படை ஹிந்தி: வடமாநில குழந்தைகளுக்காக ஏற்பாடு

அரசுப் பள்ளியில் அடிப்படை ஹிந்தி: வடமாநில குழந்தைகளுக்காக ஏற்பாடு


UPDATED : ஆக 18, 2020 12:00 AM

ADDED : ஆக 18, 2020 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2020 12:00 AM ADDED : ஆக 18, 2020 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர் ஒன்றியத்தில், அரசு பள்ளிகளில், நேற்று(ஆக.,17) மாணவர் சேர்க்கை ஜரூராக நடந்தது. வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, அடிப்படை இந்தியும் கற்றுத் தரப்படுகிறது.
அன்னூர் ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப்பள்ளிகளில், நேற்று (ஆக.,17) மாணவர் சேர்க்கை துவங்கியது.
கெம்பநாயக்கன்பாளையம் துவக்கப்பள்ளி தலைமையாசிரியை சாந்தி கூறுகையில், "அன்னூர் ஒன்றியத்தில் உள்ள துவக்கப்பள்ளிகளில், அதிகபட்சமாக, இங்குதான், 172 பேர் படிக்கின்றனர். இடைநின்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில், வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, பிரத்யேகமாக இந்தி ஆசிரியை நியமிக்கப்பட்டு, அடிப்படை இந்தி கற்றுத் தரப்படுகிறது. அன்னூர் வடக்கு துவக்கப்பள்ளியில், முதல் நாளான நேற்று (ஆக.,17), 10 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்," என்றார்.
வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ் கூறுகையில், "அன்னூர் வட்டாரத்தில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் அதிகளவிலும், மற்ற வகுப்புகளில் குறைவாகவும் மாணவர்கள் சேர்ந்தனர். புத்தகப்பை, புத்தகம், நோட்டு ஆகியவை உடனடியாக வழங்கப்பட்டன. கல்வி தொலைக்காட்சிகளில் பாடங்கள், ஒளிபரப்பாகும் நேரம் தெரிவிக்கப்பட்டது," என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us