தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய மனுக்கள் ரத்து!

நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய மனுக்கள் ரத்து!

நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய மனுக்கள் ரத்து!


UPDATED : ஆக 18, 2020 12:00 AM

ADDED : ஆக 18, 2020 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2020 12:00 AM ADDED : ஆக 18, 2020 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வுகள் ரத்து

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, நாடு முழுதும் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து மாணவர்களும் தேர்ச்சியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை, ஜூலை, 26ம் தேதி நடத்த, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.
அதேபோல், ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்பதற்கான, ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வை, ஜூலை 18 - 23ம் தேதிகளில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறையாததால், இந்த இரண்டு நுழைவுத் தேர்வுகளையும் ஒத்தி வைக்கக் கோரி, 11 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, &'வைரஸ் பாதிப்பு இருந்தாலும், போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், ஜே.இ.இ., தேர்வை, செப்., 1 - 6ம் தேதி வரையும், நீட் தேர்வை, செப்., 13ம் தேதியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது&' என, முந்தைய விசாரணையின் போது தெரிவித்திருந்தது.
பாதுகாப்பு:

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:


கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து, இயல்பு நிலை திரும்பியதும் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.
நாங்கள் தேர்வை ரத்து செய்யும்படி கோரவில்லை; ஒத்திவைக்கும்படி தான் கூறுகிறோம். தேர்வை மீண்டும் நடத்தும்போது, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன், தேர்வு மையங்களையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, &'&'தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. &'&'மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, போதிய பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,&'&' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: மாணவர்களுக்கு கல்வி மிகவும் முக்கியம்; அது, உரிய காலத்தில், உரிய நேரத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். மாணவர்களின் கல்வியை நீண்ட நாட்களுக்கு முடக்கி வைக்க முடியாது. அவர்களது கல்வி வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது. வாழ்க்கை ஓட்டத்தில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், மாணவர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தேர்வை ரத்து செய்வதன் வாயிலாக, ஒரு கல்வி ஆண்டை இழக்க மாணவர்கள் தயாராக உள்ளனரா...
&'இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக விசாரிக்க வேண்டும்; அதற்காக நீதிமன்றத்தை திறக்க வேண்டும்&' என, மாணவர்கள் தரப்பில் கூறவில்லையா... அப்படி இருக்கும்போது, தேர்வை நடத்துவதற்கு மட்டும் ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள்?
துவக்கலாம்:

எனவே, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை, திட்டமிட்டபடி நடத்துவதற்கான நடவடிக்கையை துவக்கலாம். தேர்வை ஒத்தி வைக்கவும், ரத்து செய்யவும் கோரிய இந்த மனுக்களில், எந்த முகாந்திரமும் இல்லை. இந்த மனுக்கள் டிஸ்மிஸ் செய்யப்படுகின்றன. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த இரண்டு தேர்வுகளும், திட்டமிட்டபடி அடுத்த மாதம் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.
ஆயுஷ் நுழைவு தேர்வு; ஒத்திவைக்க கோரிக்கை:

அகில இந்திய, &'ஆயுஷ்&' முதுநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வை, வரும், 29ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும், ஆயுர்வேதிக் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள், 17 பேர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில், முன்கள போர் வீரர்களாக பணியாற்றி வருகிறோம். வரும், 29ல் நடக்கவுள்ள நுழைவுத் தேர்வில் பங்கேற்கச் சென்றால், விதிமுறைப்படி எங்களை, 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும்.
மேலும், இந்த மாத இறுதி வரை, அனைத்து கல்வி நிலையங்களையும் மூட வேண்டும் என்ற, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மீறும் வகையில், ஆயுஷ் நுழைவுத் தேர்வு அறிவிப்பு உள்ளது. எனவே, நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us