அரசு பள்ளிகளில் அட்மிஷன்: சமூக விலகல் கடைபிடிக்க அறிவுறுத்தல்
அரசு பள்ளிகளில் அட்மிஷன்: சமூக விலகல் கடைபிடிக்க அறிவுறுத்தல்
UPDATED : ஆக 18, 2020 12:00 AM
ADDED : ஆக 18, 2020 12:17 PM
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. பெற்றோருடன் வந்து சான்றிதழ்களை வழங்கி பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் பள்ளிகள் திறக்கவில்லை. &'ஆன்லைன்&' வகுப்பு மற்றும், &'டிவி&'க்களில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்த கல்வித்துறை உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நேற்று மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. 1 - 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் மற்ற வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. உரிய சமூக இடைவெளி பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் பள்ளிகளில் சேர்க்கை நடந்தது.
மாணவர்கள் ஆர்வமாக பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். புதிதாக சேரும் மாணவர்களுக்கு பேக், பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது. கல்வி மாவட்ட அலுவலர் சுப்பிரமணியம் கூறுகையில், &'&'மாணவர் சேர்க்கையில் விதிமுறைகள் பின்பற்றவும்; காலை மற்றும் மதியம் வேளையில், தலா 20 பேர் வீதம் மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் மாணவர்கள் வர வேண்டாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள், &'ஆன்லைன்&' வாயிலாகவோ அல்லது சில நாட்கள் கழித்தோ வந்து பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம். நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்து கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்,&' என்றார்.
உடுமலை
உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு, தனியார் உட்பட, 333 பள்ளிகள் உள்ளன. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளத்தில் துவக்கம் முதல் மேல்நிலை வரை, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது.பெற்றோர், அந்தந்த பள்ளிக்கு நேரடியாகச்சென்று, கையில் வைத்திருக்கும் சான்றிதழ்களை வைத்து சேர்க்கை பதிவு செய்தனர்.
மாற்றுச்சான்றிதழ் பெற முடியாத மாணவர்களுக்கு ஆதார் அட்டை ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தலைமையாசிரியர்கள் சேர்க்கை நடத்தினர். பள்ளிகளில் ஆசிரியர்கள் நுழைவாயிலிலிருந்தே பெற்றோரை சமூக விலகல் பின்பற்றுவதற்கும், முகக்கவசம் அணிந்துள்ளதை உறுதிபடுத்தி வழிநடத்தினர்.
சபாஷ் ஆசிரியர்கள்!
பொள்ளாச்சி, டி.நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுபி நாகராஜ், அவரது மகளை கடந்தாண்டு அதே பள்ளியில் சேர்த்தார். அதே போன்று, ஜமீன்முத்துார் பள்ளி ஆசிரியர் பழனிக்குமார், டி. நல்லிக்கவுண்டன்பாளயைம் பள்ளியில் தனது மகனை, ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.ஆசிரியர் பழனிக்குமார் கூறுகையில், &'&'அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்நிலையில், எனது மகனையும் அரசு பள்ளியில் சேர்த்துள்ளேன்,&'&' என்றார்
