தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இறுதி செமஸ்டர் தேர்வு? தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

இறுதி செமஸ்டர் தேர்வு? தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

இறுதி செமஸ்டர் தேர்வு? தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்


UPDATED : ஆக 19, 2020 12:00 AM

ADDED : ஆக 19, 2020 12:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2020 12:00 AM ADDED : ஆக 19, 2020 12:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால், பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், &'பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடைசி ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வை, செப். 30க்குள் நடத்த வேண்டும்&' என, ஜூலை, 6ல் பிறப்பித்த உத்தரவில், யு.ஜி.சி., கூறியுள்ளது. 
அதே நேரத்தில், கடைசி செமஸ்டருக்கான தேர்வுகளை ரத்து செய்வ தாக, டில்லி மற்றும் மஹாராஷ்டிர அரசுகள் அறிவித்தன. இந்தப் பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வில், கடைசி கட்ட வாதங்கள் நேற்று முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை, அமர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. நேற்று நடந்த விவாதத்தின்போது, &'தேர்வு நடத்துவதற்கு, மாநிலங்கள் கால அவகாசம் கேட்கலாம்.
ஆனால், ரத்து செய்ய அதிகாரம் இல்லை. தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை கடுமையான உத்தரவாக எடுத்துக் கொள்ள கூடாது&' என, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டார்.&'பேரிடர் சட்டத்தின் கீழ், மாநிலங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மீறி, தேர்வு நடத்தும்படி, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., உத்தரவிட முடியுமா&' என, அமர்வு கேள்வி எழுப்பியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us