தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி

பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி

பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி


UPDATED : அக் 24, 2009 12:00 AM

ADDED : அக் 24, 2009 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2009 12:00 AM ADDED : அக் 24, 2009 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: ஆதிதிராவிடர் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியலில் ஏற்கனவே பணிபுரிபவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால், குளறுபடி ஏற்பட்டுள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பதிவு மூப்பு பட்டியல் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவின் கீழ், அக்., 14ல் வெளியிடப்பட்ட பட்டியலில் ஏற்கனவே 2006ல் தேர்வு பெற்று, தற்போது அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.


இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் தாமரைக்குளத்தை சேர்ந்த தேவசேனா கூறியதாவது: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 2007 ஜூலையில் பதிவு செய்தேன். பதிவு மூப்பு அடிப்படையில், ஆதிதிராவிடர் பிரிவின் கீழ் இந்த முறை வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பினேன். ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களே மீண்டும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


இந்த குளறுபடியால், என்னை போன்றவர்களுக்கு பதிவு மூப்பு இருந்தும் கிடைக்கவேண்டிய பணி தாமதமாகி வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, புதிய பட்டியல் வெளியிட்டால் தான் குளறுபடி தவிர்க்கப்படும், என்றார்.


வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பணி நியமனம் முழுவதும் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நடக்கிறது. இதில் தவறுதலாக பணியில் சேர்ந்தவர்கள் பெயர்கள் மீண்டும் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அவர்களுக்கு பணி வழங்கப்பட்ட பிறகும், பட்டியலில் இருந்து பெயரை நீக்காமல் இருப்பதே இதற்கு காரணம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் மீண்டும் அதே பணிக்கு வரப்போவதில்லை. இதனால், அடுத்த சீனியாரிட்டியில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us