அரசு கல்லுாரியில் ஆன்லைன் விண்ணப்பம் 864 இடங்களுக்கு 2,243 மாணவர்கள் பதிவு
அரசு கல்லுாரியில் ஆன்லைன் விண்ணப்பம் 864 இடங்களுக்கு 2,243 மாணவர்கள் பதிவு
UPDATED : ஆக 21, 2020 12:00 AM
ADDED : ஆக 21, 2020 05:56 PM
உடுமலை:
உடுமலை, அரசு கலைக் கல்லுாரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு, 2,243 விண்ணப்பங்கள் &'ஆன்லைனில்&' பதிவு செய்யப்பட்டுள்ளன.
உடுமலை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம், மற்றும் உடுமலை சுற்றுப்பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். தொழில்நுட்ப வசதி, தேசிய அளவில், தரவரிசையில் முன்னேற்றம் கண்டு வருவது, நவீன வகுப்பறை கட்டடங்களுடன் இக்கல்லுாரி வளர்ச்சியடைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு &'ஆன்லைனில்&' விண்ணப்பிக்கும் நடைமுறையை அரசு அறிவித்தது.
கல்லுாரியில், இளநிலையில் மட்டும் தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட, 22 பாடப்பிரிவுகள் உள்ளன.முதல் ஷிப்ட்டில் 19 பாடப்பிரிவுகள், இரண்டாம் ஷிப்ட்டில் மூன்று பாடப்பிரிவுகளும் உள்ளன. ஆண்டுதோறும், சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில், விண்ணப்பிக்கும் நடைமுறை &'ஆன்லைனுக்கு&' மாற்றப்பட்ட நிலையிலும், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு)பொன்முடி கூறுகையில், &'&' உடுமலை அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டில், 864 இடங்களுக்கு, விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இதில், 2,243 விண்ணப்பங்களை &'ஆன்லைனில்&' பதிவு செய்துள்ளனர். அடுத்தகட்ட சேர்க்கை நடவடிக்கை குறித்து உயர்கல்வித்துறை அறிவித்த பின்னர், பின்பற்றப்படும்,&'&' என்றார்.
