முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு: கல்லூரிகள் எதிர்ப்பு
முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு: கல்லூரிகள் எதிர்ப்பு
UPDATED : ஆக 21, 2020 12:00 AM
ADDED : ஆக 21, 2020 06:33 PM
மதுரை:
போதிய மாணவர் சேர்க்கை இல்லாத நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு துவங்க அரசு உத்தரவிட்டதற்கு தனியார் கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கொரோனாவால் கல்லுாரிகளில் நேரடி விண்ணப்ப முறைக்கு தடை விதித்து ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டது. கிராம மாணவர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.நகர் பகுதிக்கு வந்து தனியார் ஆன்லைன் மையங்களில் ரூ. 500 வரை கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர். &'அந்தந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை மையம் ஏற்படுத்த வேண்டும்&' என்ற கல்லுாரிகள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.
ஆன்லைன் பதிவு உட்பட பல நடைமுறை சிக்கலால் முதலாமாண்டில் போதிய மாணவர் சேர்க்கை இல்லை. இந்நிலையில் ஆக.,24 முதல் ஆன்லைன் வகுப்பு துவங்க மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் கல்லுாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகள் நிர்வாகிகள் சங்க செயலாளர் ராஜகோபால் கூறியதாவது:
கொரோனாவால் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களை அதிகாரிகள் புரிந்துகொள்ளவில்லை. ஜூலை 20ல் ஆன்லைன் பதிவு துவங்கியது. ஆக.,1 முதல் சான்றிதழ் பதிவேற்றம் நடக்கிறது. நெட்வொர்க் பிரச்னையால் பதிவேற்ற பணிகள் கடுமையாக பாதித்தன. பஸ் போக்குவரத்து இல்லாததது உள்ளிட்ட பிரச்னையால் தனியார் கல்லுாரிகளில் 25 சதவீதமே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. காலியிடங்களை பொறுத்து இரண்டாம் கட்ட சேர்க்கை செப்.,10 வரை நடக்கும். இந்நிலையில் ஆக., 24ல் ஆன்லைன் வகுப்பு துவங்க இயலாது. அரசு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
