தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலைஞர்களுக்காக தனி இணைய வாயில்

கலைஞர்களுக்காக தனி இணைய வாயில்

கலைஞர்களுக்காக தனி இணைய வாயில்


UPDATED : ஆக 25, 2020 12:00 AM

ADDED : ஆக 25, 2020 01:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2020 12:00 AM ADDED : ஆக 25, 2020 01:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில், கலைஞர்களுக்கான தனி இணைய வாயிலை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.
கலை பண்பாட்டுத்துறையின், www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில், கலைஞர்களுக்கான தனி வாயில் துவக்கப்பட்டுள்ளது. இணையவாயிலில், நிகழ்த்து கலைகளில், மரபு மற்றும் கிராமியம் பிரிவுகளில், குரலிசை, இசைக் கருவிகள், நடனம், நாடகம் ஆகிய துணைப் பிரிவுகளில், ஒவ்வோர் உட்பிரிவும் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், கலைக்குழுக்கள், தங்கள் குழுவை சார்ந்த, அனைத்து கலைஞர்களின் முகவரி, தொடர்பு எண், வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவற்றுடன் பதிவு செய்து கொள்ள, வழிவகை செய்யப்பட்டுள்ளது. கலைக் குழுக்களுக்கு வாய்ப்பளிப்போர் விபரங்களை காணலாம். கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள்; ஓவிய, சிற்ப கண்காட்சி போன்றவற்றுக்கும், இக்கலைக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட கலைஞர்களின் பதிவுவாயிலாக, வாய்ப்புகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனி இணைய வாயிலை, முதல்வர், &'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக, நேற்று திறந்து வைத்தார்.
கட்டடம் திறப்பு

மதுரை மாவட்டம், பசுமலையில் இயங்கி வரும், தமிழ்நாடு அரசு இசைக் கல்லுாரியில், 95 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கோவை மாவட்டம்,மலுமிச்சம்பட்டியில் உள்ள, தமிழ்நாடு அரசு இசைக் கல்லுாரி வளாகத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில், மண்டலக் கலை பண்பாட்டு மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, &'வீடியோ கான்பரன்ஸ்&' வழியே திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன், சுற்றுலாத்துறைச் செயலர் விக்ரம் கபூர், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அகழாய்வு அறிக்கை வெளியீடு

தொல்லியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட, &'தமிழகத்தில் நடந்து வரும் தொல்லியல் அகழாய்வுகள் முன்னேற்ற அறிக்கை - - ஜூலை 2020&' ஐ, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், சிவகங்கை மாவட்டம், கீழடி; அதைச் சுற்றியுள்ள, கொந்தகை, அகரம், மணலுார்; துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுார் மற்றும் சிவகளை; ஈரோடு மாவட்டம், கொடுமணல் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
வேலுார், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில், புதிய கற்கால இடங்களைக் கண்டறிதல், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், தாமிரபரணி ஆற்றங்கரை ஓரங்களில், தொல்லியல் சார் இடங்களை கண்டறியும், தொல்லியல் கள ஆய்வுகள் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் தொடர்பாக, ஜூலை, 31 வரையிலான பணி, இதுவரையிலான முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்த விபரங்கள், புகைப்படங்கள் ஆகியவை, அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us