தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் படிப்புகளில் சேர 38,000 பேர் ஆர்வம்

வேளாண் படிப்புகளில் சேர 38,000 பேர் ஆர்வம்

வேளாண் படிப்புகளில் சேர 38,000 பேர் ஆர்வம்


UPDATED : ஆக 26, 2020 12:00 AM

ADDED : ஆக 26, 2020 08:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2020 12:00 AM ADDED : ஆக 26, 2020 08:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு, 37 ஆயிரத்து, 879 விண்ணப்பங்கள் இணையவழியில் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளநிலை இளம் அறிவியல் பிரிவில், பல்கலையின் கீழ் உள்ள, 14 உறுப்பு கல்லுாரிகளில், 1,600 மற்றும் 28 இணைப்பு கல்லுாரிகளில், 3,100 என, மொத்தம், 4,700 இடங்கள் உள்ளன.
கடந்த, 8ம் தேதி துவங்கிய இணையவழி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவில், முதல் நாளில் மட்டும், 8,770 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. நேற்று வரை, 37 ஆயிரத்து, 879 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. செப்., 17 வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிழைத்திருத்தம் செய்ய, செப்., 18 முதல், 20 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
செப்., 29ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். விபரங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களுக்கு, www.tnauonline.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டை பார்க்கலாம். 
மேலும், விபரங்களுக்கு 0422 - 6611322, 6611345, 6611346 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us